விஜய் வீதிக்கு வந்து போராடினால் நான் அவருக்கு அடிமை... அமைச்சர் சவால்!

Published : Nov 09, 2018, 12:12 PM IST
விஜய் வீதிக்கு வந்து போராடினால் நான் அவருக்கு அடிமை... அமைச்சர் சவால்!

சுருக்கம்

நடிகர் விஜய் வீதிக்கு வந்து, மக்களுக்காக போராடினால், நான் அவருக்கு அடிமையாக இருப்பேன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சவால் விட்டுள்ளார்.

நடிகர் விஜய் வீதிக்கு வந்து, மக்களுக்காக போராடினால், நான் அவருக்கு அடிமையாக இருப்பேன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சவால் விட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஆளுங்கட்சியினரை சரமாரியாக வசனத்தால், தாக்குவது போன்ற காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.  குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இலவச திட்ட பொருட்களை, தீயில் வீசுவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காட்சிகளால் அதிமுகவினர் கொந்தளித்துள்ளனர். 

இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜய் சினிமாவில் வசனம் பேசி நடிப்பதைவிட, நிஜத்தில் வீதியில் இறங்கி பொதுமக்களிடம் பேசட்டும். பொதுமக்கள் மத்தியில் பேசினால் மட்டுமே அவர் உண்மையான மக்களுக்காக தொண்டு செய்பவர் என ஏற்று கொள்ள முடியும். அப்படி அவர் வீதிக்கு வந்து, வீர வசனங்களை பேசினால், நான் அவருக்கு அடிமையாக இருக்கிறேன். அதுபோன்ற சம்பவம் நடக்க வேண்டும் என எதிர் பார்க்கிறேன் என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு