பன்றிக்காய்ச்சல் அவசர நிலை உடனடி தேவை...! விழிக்குமா தமிழக அரசு..?

By thenmozhi gFirst Published Nov 9, 2018, 1:32 PM IST
Highlights

வருடம் தோறும் அக்டோபர் நவம்பர் டிசம்பர் இந்த மூன்று மாதங்களில் தமிழகத்திற்கு என்னதான் அப்படி ஒரு சாபமோ தெரியாது....எதாவது ஒரு வழியில் தமிழகத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

வருடம் தோறும் அக்டோபர் நவம்பர் டிசம்பர் இந்த மூன்று மாதங்களில் தமிழகத்திற்கு என்னதான் அப்படி ஒரு சாபமோ தெரியாது...எதாவது ஒரு வழியில் தமிழகத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு என இயற்கை சீற்றமாக இருக்கும் அல்லது டெங்கு, பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் என இப்படியுமாக சில தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறது.

விளைவோ நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு, தினம் தினம் காய்ச்சலுக்கு பலி பலி என தொலைக்காட்சி செய்தியில் பார்க்க முடிகிறது. குறிப்பாக, தமிழகத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என அதிகம் பெருகிக்கொண்டே வருகிறது. அரசு தெரிவிக்கும் புள்ளி விவரப்படி, ஒரு டிவிஷனில், இரண்டு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டால், 15 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என விவரம் தெரிய வந்து உள்ளது.

ஆனாலும் அரசு தரப்பில் இருந்து தேவையான அனைத்து  நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்  அரசு  எடுத்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து வந்தாலும் உயிர் இழப்புகள் அதிகரித்து தான் வருகிறது.

பன்றிக் காய்ச்சலுக்கு கோவை மாவட்டம் சூலூர் உட்பட இன்று  மட்டுமே தமிழகத்தில்  இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை, இதற்கான  நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டிய  நிலை தற்போது உருவாகி உள்ளது. பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு உள்ளிட்ட மற்ற மர்ம காய்ச்சலுக்கு மட்டும்  தினம் தினம் உயிர் இழப்புகள் ஏற்ப்பட்டு வருவதால் இனியாவது விழித்துக்கொள்ளுமா அரசு  என மக்கள்  தங்களது அச்சத்தையும் வேதனையையும் தெரிவித்து வருகின்றனர்.

click me!