Thirumavalavan : ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே ஓட்டு வாங்கிய பாஜக 3-வது பெரிய கட்சியா.? டாராக்கிய திருமாவளவன்!

Published : Feb 27, 2022, 09:16 PM IST
Thirumavalavan : ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே ஓட்டு வாங்கிய பாஜக 3-வது பெரிய கட்சியா.? டாராக்கிய திருமாவளவன்!

சுருக்கம்

திமுக கூட்டணி கட்சிகள் வாக்கு சதவீதத்தில் மேலே உள்ளன. அதிமுகவும் வாக்குகளை பெற்றிருக்கிறது. மூன்றாவது பெரிய கட்சி என்று கூறும் பாஜக, பல இடங்களில் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது. 

மூன்றாவது பெரிய கட்சி என்று கூறும் பாஜக, பல இடங்களில் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது. செங்கல்பட்டில் ஓர் இடத்தில் வெறும் ஒரு ஓட்டை மட்டுமே பாஜக பெற்றுள்ளது. இதுதான் அவர்களின் உண்மையான பலம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் சமய சார்பின்மை, சமூகநீதி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விசிக  தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசுகையில், “பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்தியாவில் மத அரசியலையும், தமிழகத்தில் சாதி அரசியலையும் செய்து இந்துக்கள் இடையே பிரிவினைவாதத்தைத் தூண்டுகின்றனர். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வெறுப்பு அரசியலை ஏற்படுத்தி, ஆதாயம் அடைய பாஜக துடிக்கிறது. தமிழக அரசும் காவல் துறையும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறது. எனவேதான் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி  தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

ஒரே நாடு,  ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதெல்லாம் தாண்டி தற்போதைய தேர்தலில் பாஜக ஒரே ஒரு வாக்கை பெற்றுள்ளனர். தற்போது தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்கின்றனர். தமிழகத்தில் திமுகவின் வாக்கு சதவீதம் என்ன, பாஜகவின் வாக்கு சதவீதம் என்ன? உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் தமிழகத்தில் மூன்றாவதுது பெரிய கட்சியாக உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் வாக்கு சதவீதத்தில் மேலே உள்ளன. அதிமுகவும் வாக்குகளை பெற்றிருக்கிறது. மூன்றாவது பெரிய கட்சி என்று கூறும் பாஜக, பல இடங்களில் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது. செங்கல்பட்டில் ஓர் இடத்தில் வெறும் ஒரு ஓட்டை மட்டுமே பாஜக பெற்றுள்ளது. இதுதான் அவர்களின் உண்மையான பலம்.

இந்தியாவில் 800 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். 400 ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவர்கள் நினைத்திருந்தால் இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றி இருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. இப்போது மத மாற்றம் செய்கிறார்கள் என்று பாஜகவும் சங்பரிவார் அமைப்புகளும் பேசுவதெல்லாம் அரசியலுக்காக சனாதான கும்பல் செய்யும் சதி வேலை” என்று திருமாவளவன் பேசினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!