சொந்த கட்சியையே நிர்வகிக்க முடியாத ஸ்டாலின் தமிழ்நாட்டை ஆளாப்போகிறாரா.? எகிறி அடிக்கும் அன்புமணி.

By Ezhilarasan BabuFirst Published Mar 20, 2021, 3:19 PM IST
Highlights

தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கவே அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் இலவச வாசிங்மிசின் திட்டத்தை அறிவித்து இருக்கிறது எனவும், தன் கட்சியையே நிர்வாகம் செய்ய முடியாத ஸ்டாலின், தமிழகத்தை எப்படி நிர்வாகம் செய்வார் எனவும் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.  

தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கவே அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் இலவச வாசிங்மிசின் திட்டத்தை அறிவித்து இருக்கிறது எனவும், தன் கட்சியையே நிர்வாகம் செய்ய முடியாத ஸ்டாலின், தமிழகத்தை எப்படி நிர்வாகம் செய்வார் எனவும் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். 

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மூன்று தலைமுறையாக மக்களுக்காக பாடுபட்டு வருகிறார் என்றும்,  அவரை அரசியல்வாதியாக பார்க்காமல் சமூக சேவகராக பார்க்கிறேன் என்றார். 

30 ஆயிரம் பேரை உயர் பொறுப்புகளில் பணியாற்றும் சூழலை உருவாக்கியவர் சைதை துரைசாமி என கூறினார். தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக உள்ளது. இந்த தேர்தலை விவசாயிக்கும், முதலாளிக்கும் உள்ள போராக பார்க்கிறேன் என்றும் 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதலமைச்சராக வந்துள்ளார். எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என ஸ்டாலின் துடித்துக்கொண்டுள்ளார். ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக முடியாது, மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராவார் என கூறினார். 

திமுக ஆட்சிக்கு வந்தால் யாரும் நடமாட முடியாது, நில அபகரிப்பு நடைபெறும் என குற்றஞ்சாட்டிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இலவசமாக பார்க்கவில்லை என அத்தியாவசியமாக பார்க்கிறேன் என கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சமூகநீதி இடஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாது என்ற அவர், திமுகவை நிர்வாகம் செய்ய பீகாரிலிருந்து பிரசாந்த் கிஷோரை அழைத்து கொண்டு வந்துள்ளார். தன் கட்சியையே நிர்வாகம் செய்ய முடியாதவர், தமிழகத்தை எப்படி நிர்வாகம் செய்வார் என கேள்வியெழுப்பினார். 

 

click me!