உண்மையாவே நாமதான் ஆட்சி செய்யுறோமா..? இல்ல.. நம்மள நாமே ஏமாத்திக்கிறோமா..? பாஜகவின் மைண்ட் வாய்ஸ்

First Published Mar 5, 2018, 2:36 PM IST
Highlights
Is really bjp ruling more states in india


காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற இலக்குடன் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக செயல்பட்டுவருகிறது. எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்கவிடக்கூடாது என்பதே பாஜகவின் பிரதான நோக்கமாக உள்ளது. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல பாஜக தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாஜக ஆளும் காலம் விரைந்து வரும் என பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தெரிவித்துவருகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்கள்:

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவின் ஆட்சியே நடப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. நாடு முழுவதும் காவிமயமாகிவிட்டது போன்ற தோற்றங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் உண்மையாகவே பாஜக எத்தனை மாநிலங்களில் ஆட்சி செய்கிறது என்று பார்த்தால், வெறும் 8 மாநிலங்கள் தான்.

குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் தான் பாஜக ஆட்சி செய்கிறது.

காங்கிரஸை ஆட்சி செய்யவிடக்கூடாது என்பதற்காக சில மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியில் பிற கட்சிகளின் அரசுகளில் இடம்பிடித்துள்ளது. மற்ற சில மாநிலங்களில் பாஜகவின் கூட்டணி கட்சி ஆள்கிறது. அப்படியான ஆட்சி நடக்கும் மாநிலங்கள்:

ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், கோவா, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ பிற கட்சிகளின் அரசுகளில் இடம்பிடித்தோ ஆட்சியில் பாஜகவின் பங்கேற்பு உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி:

பஞ்சாப், கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. 

பிராந்திய கட்சிகளின் ஆட்சி:

தமிழ்நாடு - அதிமுக

மேற்கு வங்கம் - திரிணாமூல் காங்கிரஸ்

தெலுங்கானா - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

ஒடிசா - பிஜூ ஜனதா தளம்

கேரளா - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

டெல்லி - ஆம் ஆத்மி கட்சி

பாஜக ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக ஆட்சியில் மாநிலங்களிலேயே ஆட்சியை பறிகொடுக்கும் நிலை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ராஜஸ்தானில் நடந்த இடைத்தேர்தலில் அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக, படுதோல்வி அடைந்தது. எனவே அதுதான் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் திரிபுராவில் மட்டும்தான் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிடாமல் தடுப்பதற்காக கூட்டணியை உருவாக்கி, ஆளுநரின் உதவியுடன் ஆட்சியமைக்கிறது பாஜக.

இப்படி ஏதாவது ஒருவகையில் நாடு முழுவதும் காவிமயமாக்க முயல்கிறது பாஜக. ஏற்கனவே பாஜகதான் அதிகமான மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கிவருகிறது.

ஆனால், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் உண்மை நிலை தெரியவரும்.
 

click me!