Udhayanidhi stalin: நான் அவன் இல்லை... யார் இந்த ராஜேஷ்..? போலீஸ் தந்த டுவிஸ்ட்

By manimegalai aFirst Published Jan 10, 2022, 7:19 AM IST
Highlights

திருப்பத்தூர்: பண மோசடியில் இருந்து தப்பிக்கவே உதயநிதி ஸ்டாலின் பிஏ என்று கூறி சிக்கி இருக்கிறார் ராஜேஷ் என போலீசார் புது தகவல் வெளியிட்டு உள்ளனர்.

 

திருப்பத்தூர்: பண மோசடியில் இருந்து தப்பிக்கவே உதயநிதி ஸ்டாலின் பிஏ என்று கூறி சிக்கி இருக்கிறார் ராஜேஷ் என போலீசார் புது தகவல் வெளியிட்டு உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்துள்ள செவ்வாத்தூர் புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் காசி மகாராஜன் மகள் தேன்மொழி. பட்டதாரி. பட்டப்படிப்புக்கு பின் சென்னையில் உள்ள ஓட்டலில் பணியில் சேர்ந்திருக்கிறார்.

அப்போது தான் அவருக்கு ராஜேஷ் என்ற ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். சென்னையை சேர்ந்தவர் என்று அறிமுகம் ஆன அவர், ஒரு கட்டத்தில் தாம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிஏ என்று கூறி வலம் வர ஆரம்பித்து உள்ளார். அதே கோதாவோடு, 4.5 லட்சம் ரூபாயை தேன்மொழியிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி லவட்டி இருக்கிறார்.

இதே பாணியை பலரிடம் பின்பற்றி லட்சம், லட்சமாக அள்ளி இருக்கிறார். நாட்கள் நகர்ந்தன, மாதங்கள், வருடங்கள் என உருண்டோடின. ஆனால் அரசு வேலையும் வரவில்லை… கொடுத்த பணமும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

சரி வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று ராஜேஷிடம் தேன்மொழி கேட்டு வைக்க, அதிரடியாக போட்டு மிரட்டி இருக்கிறார் ராஜேஷ்.

இது குறித்து திருப்பத்தூர் எஸ்பிக்கு தேன்மொழி புகார் தர, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக புகார் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விசாரணை தொடங்கியது…. ராஜேஷை போலீசார் அழைக்க, நான் உதயநிதி ஸ்டாலின் பிஏ என்று உதார் விட்டு, வர மறுத்து இல்லாத கதைகளையும் எல்லாம் அள்ளிவிட்டு இருக்கிறார்.

புகார்தாரர் தேன்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேச, அந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தேன்மொழிப புகார் கொடுக்க களத்தில் அதிரடியாக இறங்கியது போலீஸ்.

சென்னையில் ஒளிந்திருந்த ராஜேஷை கந்திலி போலீசார், கொத்தாக அள்ளி சென்றனர். போலீஸ் வழக்கமான பாணியில் விசாரணை நடத்த, ஒவ்வொன்றாக விவரங்கள் வெளியாகின.

சிக்கிய ராஜேஷ் தந்தை பெயர் கருணாமூர்த்தி. ரிட்டயர்டு எஸ்ஐ. எல்லா விசாரணைகளும் முடிந்து ராஜேஷ் பற்றியி டீயெல்களுடன் ஒரு அறிக்கை ஒன்று திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ளது.

ராஜேஷ் எந்த கட்சியையும் சேர்ந்தவர் கிடையாது, உதயநிதி ஸ்டாலின் பிஏவும் கிடையாது, பணமோசடி விவகாரத்தில் இருந்து தம்மை காப்பாற்றி கொள்ள ஆள் மாறாட்டம், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என களத்தில் இறங்கி இருக்கிறார்.

அதன் பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட, இப்போது கைதாகி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறி இருக்கிறது போலீஸ்.

click me!