
ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர் கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐசாரி வேலனின் மகள் அழகு தமிழ்செல்வியும் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பிரச்சார வாகனத்தின் முன்பு மறைந்த ஜெயலலிதாவின் பூத உடலை போன்ற மாதிரியை செய்து அதன் மேல் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது.
ஓபிஎஸ் அணியினரின் இச்செயலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெவின் சவப்பெட்டியை வைத்து பிரச்சாரம் செய்வது ஈவு இறக்கமற்ற செயல், மனிதாபிமானமற்ற செயல்.
ஜெயலலிதாவை இதய தெய்வம் என்று புகழ்ந்த பன்னீர் செல்வம் அவருக்கு காட்டும் நன்றிகடன் இதுதானா?
அநாகரிக பிரச்சாரம் செய்த மாபா பாண்டியராஜனை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்
இதுபோன்ற பிரச்சாரத்தை அனுமதித்த ஒ.பி.எஸ்க்கும் திமுக கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.