ஜெ. சவப்பெட்டி வைத்து பிரச்சாரம் - தேசியக் கொடியை அவமதிப்பதாக குற்றசாட்டு...

 
Published : Apr 06, 2017, 10:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
ஜெ. சவப்பெட்டி வைத்து பிரச்சாரம் - தேசியக் கொடியை அவமதிப்பதாக குற்றசாட்டு...

சுருக்கம்

jeyalalithaa campaign put the coffin - the charge is an insult to the national flag

ஜெ சவபெட்டியின் மாதிரி மீது தேசியக்கொடியை போர்த்தி ஒ.பி.எஸ் அணியினர் பிரச்சாரம் மேற்கொண்டதால் ஆர்.கே.நகரில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுக அம்மா அணி சார்பில் டி.டி.வி தினகரனும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் பகுதியில் மதுசூதனனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருடன் ஆர்.கே.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐசாரி வேலன் மகள் அழகு தமிழ்செல்வியும் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பிரச்சார வாகனத்திற்கு முன்பு ஜெயலலிதா இறந்தபோது ராஜாஜி ஹாலில் சவபெட்டியில் வைக்கபட்டிருந்த பூத உடலை போன்ற மாதிரியை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஜெயலலிதா அப்போது முதலமைச்சாராக இருந்தமையால் அவரின் பூத உடலின் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. அதேபோன்ற தோற்றத்தை உடையே மாதிரி மீது ஒ.பி.எஸ் அணியினர் தேசிய கோடியை போர்த்தி பிரச்சாரம் மேற்கொண்டது அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்களின் பரிதாபத்தை பெறுவதற்கு ஒ.பி.எஸ் அணியினர் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கியதால் ஆர்.கே.நகர் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!