பன்னீரிடம் பேரம் படியாத விரக்தியில், தினகரனுடன் கைகோர்த்த நாட்டாமை!

 
Published : Apr 06, 2017, 06:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
பன்னீரிடம் பேரம் படியாத விரக்தியில், தினகரனுடன் கைகோர்த்த நாட்டாமை!

சுருக்கம்

Sarathkumar join hand with Dinakaran after dealing with OPS

பன்னீர்செல்வத்துடன் பேரம் படியாத விரக்தியில். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான நடிகர் சரத்குமார், தினகரனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சரத்குமார், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக, அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, ஜெயலலிதாவை சந்தித்து, கூட்டணியில் இணைந்து, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

பின்னர், சில நாட்கள் வரை அமைதியாக இருந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வத்திற்கே தமது ஆதரவு என்று கூறி வந்தார்.

இந்நிலையில், இன்று  டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்த சரத்குமார், அவருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தினகரனுக்கு ஆதரவாக, நாளை முதல் பிரச்சாரம் செய்ய போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

ஜெயலலிதா இருந்த வரை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பி.எஸ்க்கு தனது ஆதரவு என கூறினார். 

ஆர்.கே நகரில் அவர் கட்சி சார்பில் நிறுத்திய வேட்பாளர் மனுவையும் மாற்று வேட்பாளர் மனுவையும் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. 

இந்த நிலையில் இன்று  சரத்குமார் அ.தி.மு.க அம்மா வேட்பாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலும், பன்னீருடன் நெருக்கமாக இருந்தவர் சரத்குமார். பல நேரங்களில் பன்னீரின் மைண்ட் வாய்சாகவும் செயல் பட்டு வந்தவர் அவர்.

ஜெயலலிதா மறைந்த சில நாட்களில், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக, முக்கிய பிரமுகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறிவந்தார்.

அதற்கு நேரடியாக பதிலடி கொடுக்க முடியாமல் தவித்த, அப்போதைய முதல்வர் பன்னீரின், வாய்சாக செயல் பட்டவர்தான் சரத்குமார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவரை எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் என்றும் அப்போது அவர் கூறினார்.

அதன் பிறகு சசிகலாவுக்கு எதிராக, ஓ.பி.எஸ் களம் இறங்கிய போதும், அவருக்கு ஆதரவாகவே சரத் குமார் இருந்து வந்தார்.

இந்நிலையில், பன்னீரிடம் தாம் எதிர்பார்த்தது நடக்காததாலும், தினகரனின் வலுவான பேரம் காரணமாகவும், அவருக்கு சரத்குமார் ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுகூட பரவாயில்லை, ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர தினகரனுக்கு ஆதரவளித்துள்ளதாக, கல்வெட்டில் பொறித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு நல்ல கருத்தையும்  கூறியுள்ளார் சரத்குமார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!