
ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதை கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆர் கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாண்டியராஜனும், அழகு தமில்செல்வியும் சேர்ந்து திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது பிரச்சார வாகனத்தின் முன்பு மறைந்த ஜெயலலிதாவின் பூத உடலை போன்ற மாதிரியை செய்து அதன் மேல் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது.
ஓபிஎஸ் அணியினரின் இச்செயல் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்துவதுடன் தேசிய கொடியை அவமதித்து விட்டதாக கோரி அதிமுக அம்மா அணியினர் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.