அண்ணா, காமராஜர் படத்திற்கு அருகில் ஜெயலலிதா புகைப்படமா.. மீண்டும் அதிமுகவை விம்பிழுத்த ஆ. ராசா..

By Ezhilarasan BabuFirst Published Feb 6, 2021, 3:23 PM IST
Highlights

அந்த கனவை திமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக தலைவர் இந்த ஆட்சியை வழிநடத்தக் கூடிய ஒரு முதல்வராக செயல்பட்டு வருகிறார், 

திமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுகூட்டம் வட சென்னை கிழக்கு பகுதி ஒட்டேரியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் துனை பொது செயலாளர் ஆ.ராசா, கொள்கைப் பரப்பு இனைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு, வடசென்னை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, திரு.வி.க. பகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனார். அப்போது மேடையில் ஆ ராசா பேசியதாவது :  

இந்தியாவிலே மதசார்பற்ற ஒரு நல்லிணக்கம் கொண்டு வந்து பாடுபடுகின்ற தலைவர் நமது தலைவர் மு. க ஸ்டாலின் தமிழகத்தில் முதலமைச்சராக மட்டுமில்லாமல் இந்திய கண்டத்திற்கு அவர் உரிய தலைவராக தனது பயணத்தை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார்.  

தனது 23 வயதில் திருமணம் ஆனவுடன் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து படிப்படியாக பல்வேறு பதவிகளை ஏற்று இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். அப்பேர்ப்பட்ட ஒரு தலைவர் இன்றைக்கு இந்திய நாடு முழுமைக்கும் ஒரு சிறந்த தலைவராக ஒரு சிறந்த சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் அண்ணா காமராஜர் உள்ளிட்டோர் படம் வைக்கப்பட்டுள்ளது,  திடீரென்று சட்டப்பேரவையில் உச்ச நீதிமன்றமே குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு அதற்கான தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் அங்கே இருப்பதை கண்டு வியந்து போனேன்.

பேரறிஞர் அண்ணா கர்மவீரர் காமராஜர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உள்ளிட்டோர்  புகைப்படம்  இருக்கும் வரிசையில்  எவ்வாறு அங்க திறக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்வாரா. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் இன்றைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குரலை பதிவு செய்து மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஏன் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

அந்த கனவை திமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக தலைவர் இந்த ஆட்சியை வழிநடத்தக் கூடிய ஒரு முதல்வராக செயல்பட்டு வருகிறார், திமுக தலைவர் என்வெல்லாம் சொல்கிறாரோ அதை எல்லாம் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அறிவுரையாக ஏற்றுக்கொண்டு அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் இருந்த காலகட்டத்தில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று சொன்னார், அது நடந்தது. கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று சொன்னார், தற்போது வரையிலும் 3 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு சம்பந்தமாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு ஒதுக்க வேண்டும் அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான செலவை அரசு ஏற்க வேண்டும், அரசு ஏற்காவிட்டால் திமுக ஏற்கும் என்ற ஒரு அறிவிப்பை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். 

அறிவித்த பின்பு தான் அரசுக்கு அந்த புத்தி வந்து. திமுக தலைவர் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதெல்லாம் தேர்தல் மனதில் வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி செய்கிறார் என்றும் ஆ.ராசா குற்றம் சாட்டினார்.
 

click me!