காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக மக்கள், விவசாயிகள் நலன் காக்கவும் உடனே முதலமைச்சர் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார்;- கர்நாடக மாநிலத்தின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை அமல்படுத்த தான் விரைவில் டெல்லி சென்று உரிய மத்திய அமைச்சர்களை சந்தித்து அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார். மேலும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. மேகதாது எங்களது உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
undefined
இதையும் படிங்க;- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி.. இது எங்களது உரிமை.. டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்..!
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வெறுமனே கண்டனம் மட்டுமே தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இரு மாநில நலன்களுக்கு மாறாக கர்நாடகா அரசு பேசி வருவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் அனுமதியின்றி காவிரிக்கு குறுக்கே தன்னிச்சையாக அணை கட்ட முடியாது. ஆனால், கர்நாடகாவில் இருக்கும் அரசுகள் அதனை தொடர்ந்து மீறி வருவது இரு மாநில உறவுகளுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல.
இதையும் படிங்க;- மேதாதுவில் அணையா? கர்நாடகா துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக மக்கள், விவசாயிகள் நலன் காக்கவும் உடனே முதலமைச்சர் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.