செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு ஏன்? செய்தியாளர்களின் கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்த முதல்வர்

By vinoth kumar  |  First Published Jun 1, 2023, 8:04 AM IST

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  


முதலீடுகளை ஈர்க்கச் சென்றுள்ளாரா? முதலீடு செய்யச் சென்றுள்ளாரா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சரியான பதிலடி கொடுத்துள்ளார். 

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதனையடுத்து, செய்தியாளர்கள் முதல்வரிடம் பல்வேறு கேள்விகயை எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

Tap to resize

Latest Videos

கேள்வி - முதலீடுகளை ஈர்க்கச் சென்றுள்ளாரா? முதலீடு செய்யச் சென்றுள்ளாரா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளாரே?

முதலமைச்சர் பதில் - பழனிசாமியின் புத்தி அது. தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று கருதிக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே
இதுதொடர்பாக நமது நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கமாக பதில் அளித்து இருக்கிறார். எனவே, நான் மேற்கொண்டு பதில் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி – மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்திருப்பது குறித்து. 

முதலமைச்சர் பதில் – இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் விளக்கமாக பதில் அளித்திருக்கிறார். அதை நானும் படித்து
பார்த்தேன். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

கேள்வி – புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது தமிழர்களுக்குப் பெருமைதானே?

முதலமைச்சர் பதில் - அது உண்மையில் சோழர் காலச் செங்கோலாக இருந்தால், அது தமிழ்நாட்டிற்கு பெருமைதான். ஆனால் சோழர் காலத்துக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வரலாற்று அறிஞர்களே சொல்லி இருக்கிறார்கள். செங்கோலை வாங்கிய அன்றே செங்கோல் வளைந்துவிட்டதே! அதற்கு உதாரணம் தான் இந்தியாவுக்கு புகழ் ஏற்படுத்திக் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகளை அடித்து உதைத்து கைது செய்த காட்சியை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதுவே சாட்சியாக அமைந்திருக்கிறது- அது தான் உண்மை.

கேள்வி – நீங்கள் மாநிலத்தில் இல்லாத போது அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவர் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி இருப்பது பற்றி?

முதலமைச்சர் பதில் - பா.ஜ.க. ஆட்சியை பொறுத்தவரைக்கும் வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி பழி வாங்குவது, அச்சுறுத்துவது எல்லாம் பல மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. இது இங்கே தொடங்கி இருக்கிறது. இது உங்களுக்கே தெரியும். இதை பற்றி நான் உங்களுக்கு விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. 

கேள்வி - செங்கோல் குறித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழ்நாடு கவர்னரும் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு அரசின் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டது சரியா?

முதலமைச்சர் பதில் - ஒன்றிய அரசின் சார்பிலான விழா குறித்த கலந்துரையாடல் என்று சொல்லித் தான் அழைத்தார்கள். அதனால் தான் எனக்கு தகவல் வந்தவுடன் அமைச்சர் சேகர் பாபு அவர்களை நானே கலந்து கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தேன். ஆனால் சென்றபிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். நிகழ்ச்சிக்கு போன அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்களே விளக்கமாக சொல்லி இருக்கிறார். குடியரசுத் தலைவர் அவர்கள் பாராளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று திரு. சேகர் பாபு அவர்கள் அதே இடத்தில் சொல்லி விட்டு வந்திருக்கிறார்.

கேள்வி – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு குறித்து?

முதலமைச்சர் பதில் - இன்று மாலை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும், பஞ்சாப் முதலமைச்சரும் என்னைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டு இருக்கிறார்கள். நேரம் கொடுத்திருக்கிறேன். நாளை மாலை என்னை சந்திக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

click me!