இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.? 10 வயது சிறுவன் போலீஸை வெட்டுவானா.? சிபிஐ விசாரணை கேட்கும் கிருஷ்ணசாமி!

Published : Nov 22, 2021, 09:45 PM IST
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.? 10 வயது சிறுவன் போலீஸை வெட்டுவானா.? சிபிஐ விசாரணை கேட்கும் கிருஷ்ணசாமி!

சுருக்கம்

நல்ல திடகாத்திரமான ஒரு காவல்துறை அதிகாரியை 10 வயது சிறுவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது சிறிதும் ஏற்புடையதாக இல்லை. அரிவாளைத் தொடுவதற்குக்கூட அஞ்சக்கூடிய வயதில், அதைத் தூக்கியது எப்படி? அதை வைத்து நல்ல உடல் வலுவுள்ள ஒரு மனிதரை உயிர்போகிற அளவிற்குக்  காயப்படுத்த முடியுமா?

திருச்சியில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனில், தமிழ்நாடு அரசு இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

திருச்சி நவல்பட்டு சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ஆடு திருடுபவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 10 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஆடு திருட்டுக் கும்பலை துரத்திப் பிடிக்கச் சென்ற சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டார். இந்த துயர்மிகு சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டுமென்று நாம் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தோம். 

பூமிநாதன் கொலைக்குக் காரணமானவர்களை தேடிக் கண்டுபிடிக்க நான்கு சிறப்புப் படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஒருவனுக்கு 19 வயது என்றும், மற்றவர்களுக்கு 10 வயது என்றும் காவல்துறை மூலமாகவே அறிவிப்பு வந்திருக்கிறது.   காவல்துறையின் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, ஆச்சர்யமூட்டுகிறது. நல்ல திடகாத்திரமான ஒரு காவல்துறை அதிகாரியை 10 வயது சிறுவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது சிறிதும் ஏற்புடையதாக இல்லை. அரிவாளைத் தொடுவதற்குக்கூட அஞ்சக்கூடிய வயதில், அதைத் தூக்கியது எப்படி? அதை வைத்து நல்ல உடல் வலுவுள்ள ஒரு மனிதரை உயிர்போகிற அளவிற்குக்  காயப்படுத்த முடியுமா? என்று பல கேள்விகள் எழுகின்றன. 

முதலில் வந்த தகவலின்படி, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தார்கள், அதில் ஒரு வாகனத்தில் திருட்டு ஆடுகளை வைத்துக் கொண்டு இரண்டு பேரும், இன்னொரு வாகனத்தில் அதற்குப் பாதுகாப்பாக இரண்டு பேரும் வந்தனர் என்று சொல்லப்பட்டது.  ஆனால் இப்பொழுது காவல்துறையினரால் தெரிவிக்கப்படக்கூடிய செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை. வழக்கமாக தென்மாவட்டங்களில் இதுபோன்ற ஒவ்வொரு பெரிய சம்பவத்திற்குப் பின்பும், கணக்கிற்காக இளஞ்சிறார்களைக் காண்பித்து அந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதே வாடிக்கை. அதைப் போன்று, திட்டமிட்டு பூமிநாதன் படுகொலையிலும் உண்மைக் குற்றவாளிகளை மறைத்து, வழக்கில் கணக்குக் காட்டுவதற்காக சிறார்களை குற்றவாளிகளாக நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது. 

எனவே காவல்துறையின் இந்த விசாரணையின் மூலம் முழு உண்மையும் வெளிவரும் என்ற நம்பிக்கை துளியளவும் இல்லை. குற்றவாளிகள் இளஞ்சிறார்கள் என்று காவல்துறையினராலேயே சொல்லப்பட்ட பின்பு, அவர்கள் கடும் தண்டனை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. எனவே இந்த வழக்கினுடைய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனில், தமிழ்நாடு அரசு இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ வசம் ஒப்படைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.  
 

PREV
click me!

Recommended Stories

TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
TVK Vijay: கோயில், மசூதிக்கு போனதுல தப்பில்லையாம்.! சர்ச்சுக்கு போனது தப்பாம்.! இப்படி பண்றீங்களேப்பா.!