திமுகவுக்கு ஒரு சட்டம் ,அதிமுகவிற்கு ஒரு சட்டமா.? டிஜிபியிடம் பொங்கிய டிஆர்.பாலு.! உதயநிதி மட்டும் கைது ஏன்.?

By T BalamurukanFirst Published Nov 23, 2020, 10:16 AM IST
Highlights

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதைக் கண்டித்து டிஜிபி அலுவலகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற எம்பி டி.ஆர்.பாலு புகார் அளித்துள்ளார்.
 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதைக் கண்டித்து டிஜிபி அலுவலகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற எம்பி டி.ஆர்.பாலு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் டிஜிபியிடம் அளித்த புகாரில், “தமிழகத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் ,அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கூட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களும் கொரோனா விதிமுறைகளை மீறி வருகின்றனர் . அவர்கள் மீது எந்த வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேசமயம் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பரப்புரையை செய்ய திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆயத்தமானார். அதனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இருப்பினும் அவர் திருக்குவளையில் மற்றும் நாகையில் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது பாரபட்சமான செயல். சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சாரக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை திமுகவினர் செய்து வருகின்றனர். அப்படியிருக்கும்போது திமுகவினர் கைது செய்வது என்பது காழ்புணர்ச்சியால் மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளை போலீசார் கைவிட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, “வேல் யாத்திரை நடத்தும் எல்.முருகன் உட்பட பாஜகவினர் கைது செய்யப்பட்டு மாலை 4 அல்லது 5மணிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளனர் . ஆனால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்து போலீசார் இரவு 10 -11 மணி வரை அவரை காக்க வைத்து பின் விடுதலை செய்கின்றனர். கைது, சிறை ,சித்திரவதை என்பதெல்லாம் திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல. தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது . சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது டிஜிபியின் கடமை. அதை தான் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அதனால் உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கையை காவலர்கள் கைவிட வேண்டும்” என்றார்.

click me!