பட்ஜெட் மற்றும் நிதி அமைச்சகம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

First Published Feb 1, 2018, 10:56 AM IST
Highlights
interesting facts about budget and finance ministry


2017-2018ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் இதுதான்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களை கவர்வதற்கான அம்சங்கள் நிறைந்ததாக இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பட்ஜெட் மற்றும் நிதியமைச்சகம் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்..

1. தொடர்ச்சியாக ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

2. இந்திய வரலாற்றில் பட்ஜெட்டே தாக்கல் செய்யாத நிதியமைச்சர் ஹேம்வந்தி நந்தன் பஹுகுணா

3. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து(1947), 2017 வரை 87 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 87 பட்ஜெட்டுகளை 25 நிதியமைச்சர்கள் தாக்கல் செய்துள்ளனர். (இந்த பட்ஜெட் நீங்கலாக)

4. நிதியமைச்சர்களாக இருந்த 4 பேர், பிரதமராகியுள்ளனர். (மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், மன்மோகன் சிங்)

5. 2 நிதியமைச்சர்கள், குடியரசுத் தலைவர்களாக இருந்துள்ளனர். (வெங்கடராமன், பிரணாப் முகர்ஜி)

6. இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே பெண் நிதியமைச்சர் இந்திரா காந்தி ஆவார். இவர் 1970 பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

7. நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூன்று பிரதமர்கள், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ( ஜவஹர்லால் நேரு - 1958, இந்திரா காந்தி - 1970, ராஜீவ் காந்தி - 1987)
 

click me!