குறையும் இரத்த அழுத்தம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Published : Apr 13, 2021, 12:09 PM IST
குறையும் இரத்த அழுத்தம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கினார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர்களுக்காக அவர்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், திடீரென அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த செவ்வாய்கிழமை சிகிச்சைக்காக சென்னையிலுள்ள ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதாகவும், அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

உன்ன விட பெரிய ஆளை எல்லாம் பாத்தாச்சு..! அமித் ஷாவுக்கு நேரடி சவால் விட்ட வைகோ
சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறலாம்... தேதியை அறிவித்த அதிமுக..!