மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. சமாளிக்க சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 13, 2021, 11:40 AM IST
Highlights

2500 செவிலியர்கள் 11மருத்துவ கல்லூரிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர். கல்லூரி திறக்கப்படும் வரை அவர்கள் கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல கொரோனா தொற்று கூடுதலாக உள்ள மாவட்டங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்களை அதிகப்படுத்தப்பட உள்ளனர். 

கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமல்லாமல், பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டம்மிட்டுள்ளது. 

இந்த தற்காலிக பணிகளுக்காக இந்திய மருத்துவ கழகத்திடம் தமிழக சுகாதாரத்துறை பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 150 மருத்துவர்கள், செவிலியர்கள் ஓரிரு தினங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் ஊரக மருத்துவ பணிகள் இயக்குனரகம் 3500 செவிலியர்களை கொரோனா பணிக்காக கூடுதலாக பணியமர்த்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கூடுதலாக 11மருத்துவ கல்லூரிக்கு அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

2500 செவிலியர்கள் 11மருத்துவ கல்லூரிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர். கல்லூரி திறக்கப்படும் வரை அவர்கள் கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல கொரோனா தொற்று கூடுதலாக உள்ள மாவட்டங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்களை அதிகப்படுத்தப்பட உள்ளனர். கூடுதலாக பணியமர்த்தப்பட உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா முகாம்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் தற்காலிகமாக ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!