பெண் எஸ்பி பாலியல் புகார் விவகாரம்.. முதற்கட்ட அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியது விசாகா கமிட்டி.

Published : Apr 13, 2021, 11:29 AM IST
பெண் எஸ்பி பாலியல் புகார் விவகாரம்.. முதற்கட்ட அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியது விசாகா கமிட்டி.

சுருக்கம்

பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணையில் முதற்கட்ட அறிக்கையை விசாகா கமிட்டி தமிழக அரசிடம் வழங்கியது. முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  

புகார் கொடுக்கவிடாமல் தடுத்த எஸ்பி ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பணியிடத்தில் காவல்துறை எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டம் - வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மேலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபியிடம் விசாகா குழு சென்னையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி விசாரணை நடத்தினர். இந்த புகார் தொடர்பாக விசாகா கமிட்டி குழு மொத்தம் 14 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த தகவல்களின் அடிப்படையில் விசாகா குழு முதற்கட்ட அறிக்கையைத் தயார் செய்தது. இந்த அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இது முதற்கட்ட அறிக்கை என்றும் முழுமையாக அறிக்கை பின்னர் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!