மருத்துவரை வழிமறித்து தாக்கி போலீஸ் அட்ராசிட்டி.. மாநகர போலீசிடம் அறிக்கை கேட்கிறது மனித உரிமை ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 13, 2021, 10:48 AM IST
Highlights

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பணிக்காக சென்ற ஹோமியோபதி மருத்துவரை காவல்துறையினர் தாக்கி மிரட்டிய விவகாரம் தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க மதுரை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கூடல் நகரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் தமிழரசன்.  

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பணிக்காக சென்ற ஹோமியோபதி மருத்துவரை காவல்துறையினர் தாக்கி மிரட்டிய விவகாரம் தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க மதுரை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை கூடல் நகரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் தமிழரசன். கடந்த 10ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் போது பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த காவல் துறையினர், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்கக் கூறியுள்ளனர். ஆவணங்களை காண்பித்த பிறகும் அவரை செல்ல அனுமதிக்காததால், கொரோனா பணிக்கு செல்லும் மருத்துவர் எனக் கூறியுள்ளார், தமிழரசன்.அப்போது, தல்லாக்குளம் உதவி ஆய்வாளர் மற்றும் மப்டியில் இருந்த காவலர்கள், மருத்துவரை தாக்கியதுடன், பொய் வழக்கு போட்டு வாழ விடாமல் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இதுசம்பந்தமாக மருத்துவர் தமிழரசன், காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், சம்பவம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

click me!