டாஸ்மாக் கடைகள் இரவு 11 மணி வரை திறந்துள்ளது.. கோயில் திருவிழாக்களுக்கு தடையா.? அர்ஜூன் சம்பத் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 13, 2021, 10:13 AM IST
Highlights

அதற்கு இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் நிச்சயம் ஒத்துழைப்பு கொடுப்பர். ஆனாலும் அரசு  சொல்லுகின்ற அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, கொரானா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை நடத்த வேண்டும் என்பது தான் பக்தர்களின் விருப்பம். 

இந்து மக்கள் கட்சித் தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விவரம்: தமிழகம் முழுக்க அனைத்து திருக்கோயில்களிலும் சித்திரை மாதம் நடைபெற வேண்டிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற வேண்டும், சித்திரை திருவிழா என்று சொன்னாலே மதுரை தான், கடந்த ஆண்டு சித்திரை திருவிழா மிகுந்த கட்டுப்பாட்டோடு, ஆன்லைன் முறையில் நடந்தது. அப்படி நடந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் வருத்தமடைந்தனர். இந்த ஆண்டு தேர்தல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் கொரானாவின் பரவல் அதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதற்கு இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் நிச்சயம் ஒத்துழைப்பு கொடுப்பர். ஆனாலும் அரசு  சொல்லுகின்ற அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, கொரானா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை நடத்த வேண்டும் என்பது தான் பக்தர்களின் விருப்பம். அரசு ரம்ஜான் பண்டிகைக்கு தொழுகை நடத்த ஏதுவாக பத்து மணிவரை அனுமதி தர வேண்டும் தலைவர்கள் கோரிக்கை வைத்ததை அதனை அரசு ஏற்றுக் கொண்டது. அவர்களுடைய திருவிழா அது பாராட்டத்தக்கதாகும். அதே போல சித்திரை திருவிழாவையும் அரசாங்கம் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 11 மணி வரை திறந்துள்ளது. சித்திரை திருவிழாவை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்த கோரிக்கையை இன்றைக்கு நாங்கள் இந்து மக்கள் கட்சி சார்பிலும் ஆன்மீகவாதிகள் அனைத்து தரப்பினர் சார்பில் இந்த கோரிக்கையை வைக்கிறோம். சித்திரை திருவிழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். இன்னொரு தமிழக கோயில் அடிமை நிறுத்து என்ற முக்கியமான ஒரு விஷயத்தை ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார்.அவரின் கோரிக்கையை ஏற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் 40 கோயில்கள் திரும்பவும்  மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மசூதி சொத்து முஸ்லிம்களிடம் இருப்பது போல, திருச்சபை சொத்து கிறிஸ்தவ அமைப்பிடம் உள்ளது போல, அரசு மற்றும் அரசியல் கலப்பற்ற ஒருவர் வாரியம் அல்லது பக்தர்கள் சபை உருவாக்கப்பட்டு கோயில்கள் பக்தர்களே நிர்வாகம் செய்யக் கூடிய அந்த நிலைம வரவேண்டும். கோயில் அடிமை நிறுத்து பக்தர்கள் கோயிலில் ஒப்படைக்க என்ற இயக்கத்தை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நடத்தும். உத்தர்கண்ட் மாநிலத்தை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும். இந்து மக்கள் கட்சி அதற்கான ஒரு உண்ணாவிரதத்தை துவங்க ஆலோசனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!