
தன்னால்தான் இன்னோவா காருக்கு விளம்பரம் கிடைத்தது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது கூறிய நாஞ்சில் சம்பத், ‘ஜெயலலிதா கூறியதாலேயே நான் அணிந்திருந்த கருப்புத்துண்டை கழற்றினேன்.
அம்மாவுக்கு கருப்பு நிறம் பிடிக்காதென்று, ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் கூறியதை அடுத்து நான் கருப்புத்துண்டை கழற்றினேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘என்னால்தான் இன்னோவா காருக்கு விளம்பரம் கிடைத்தது' என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியலில் உள்ளவர்களில் யார் ஆளுமை மிக்கவர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சம்பத், “ஸ்டாலினுக்கு எந்த ஆளுமை கிடையாது. வைகோவிற்கு அந்த ஆளுமை உண்டு.
இந்திய அரசியலிலேயே வைகோ அளவிற்கு ஆளுமை செலுத்துபவர்கள் யாரும் கிடையாது. வைகோவை காலம் நிராகரித்துவிட்டது. வைகோவும் அந்த இடத்தை காலி செய்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
தவிரவும், பன்னீர்செல்வம் அணியினர் தேசியக் கொடியை அவமதித்தால் கூட ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால், நாங்கள் மூச்சிவிட்டால் கூட விமர்சனம் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.