
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஆவணமும் கைப்பற்றப்படவில்லை, கோவணமும் கைப்பற்றப்படவில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தொடர்ந்து அனைவரையும் விமர்சித்து வருகிறீர்களே என்று நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ‘டிடிவி தினகரனை விமர்சிக்க மாட்டேன்’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஆவணமும் கைப்பற்றப்படவில்லை, கோவணமும் கைப்பற்றப்படவில்லை என்று காட்டமாக தெரிவித்தார்.
மேலும், வீடியோவில் விஜயபாஸ்கர் ஆதரவாளர் ஆவணத்தை தூக்கி எறிந்ததாக பதிவாகியுள்ளது குறித்து பதிலளிக்கையில், ஆதரவாளர் ஒருவர் ஆவணத்தை தூக்கியெறிந்ததாக கூறுப்படுவது பொய் என்றும் அந்த ஆதரவாளர் பயத்தில் தான் கொண்டு வந்ததையே தூக்கி எறிந்திருக்கலாம் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.