சசிகலா போஸ்டர் மீது கறுப்பு மை வீச்சு… மதுரையில் பரபரப்பு…

 
Published : Dec 20, 2016, 10:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சசிகலா போஸ்டர் மீது கறுப்பு மை வீச்சு… மதுரையில் பரபரப்பு…

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக அவரின் தோழி சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் போனறோர், சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்றும் பேட்டிஅளித்தது வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு, வால் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சசிகலாவுக்கு எதிராகவும் தொண்டாகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நநிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக  ஒட்டிய போஸ்டர் மீது கறுப்பு மை வீசப்பட்டுள்ளது.

அமைச்சர் செல்லுர் ராஜ மற்றும் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துனை மேயரும்,எம்.பி.யுமான கோபாலகிரு னின் ஆதரவாளர்கள் சிலர் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள ஒட்டியிருந்தனர். மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்த நிலையில் பல இடங்களில் அந்த போஸ்டர்கள் மீது மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் கறுப்பு மையை வீசிவிட்டுச் சென்றனர்.

இதனால் மதுரை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!
ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!