அத்தையின் முகத்தைக் கூடபார்க்க விடாமல் நடுரோட்டில் தவிக்கவிட்டனர்….ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உருக்கம்…

First Published Dec 20, 2016, 6:13 AM IST
Highlights


அத்தையின் முகத்தைக் கூடபார்க்க விடாமல் நடுரோட்டில் தவிக்கவிட்டனர்….ஜெயலலிதாவின்  அண்ணன் மகள் தீபா உருக்கம்…

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக வுக்கு யார் தலைமை தாங்குவது என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. ஜெவின் தோழி சசிகலாவே அதற்கு தகுதியானவர் என்று ஒரு புறம் லாபி நடைபெற்று வந்தாலும்,ஜெவின் அண்ணன் மகள் தீபா அதிமுக தொண்டர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தீபா நேற்று பேட்டியளித்தது அனைவரையும் உருக்குவதாக அமைந்திருந்தது

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனுக்குள் சென்று அவரை பார்க்க முடியாமல் போனதற்கு காரணம் அவரது கூட இருந்தவர்கள் தான் என பகிரங்கமாக குற்றம்சசாட்டினார்

தனது குடும்பத்தில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்வுகளான  தனது திருமணம், அம்மாவின் மறைவு என எதற்கும் பாசமிகுந்த அத்தை வராமல் போனதற்கு காரணம் அவரது கூட இருந்தவர்கள் தான் எனவும் தெரிவித்தார். கடைசி வரை அன்பு அத்தையை பார்க்கவிடாமலேயே செய்துவிட்டனர் என தீபா கண் கலங்கினார்.

தனது குடும்பத்தில் நடக்கும் எந்தவித தகவலையும் அத்தையின் காதுகளுக்குச் சென்று சேரவிடாமல் தடுத்தது சசிகலாவும் அவரைச் சேர்ந்தவர்களும்தான் என்றார் தீபா.

அதேபோல் ” போயஸ் தோட்ட இல்லத்துக்குள் உங்களை வரக்கூடாது என ஜெ சொல்லிவிட்டார், அவர் உங்கள் மேல் கோபமாக இருக்கிறார் ”  என்று சொல்லியே, அங்கு செல்லவிடாமல்  சசிகலா தடுத்து விட்டார் என்றும் தீபா குற்றம்சாட்டினார்.

கடைசியில் ஜெயலலிதா இறந்து உடலை போயஸ் கார்டனுக்குள் கொண்டு சென்றபோது கடைசியாக ஒரு முறை அவரது முகத்தை பார்த்துவிடலாம் என முயற்சி செய்தபோது 7 மணி தன்னை நடுரோட்டில் சசிகலா ஆதரவாளர்கள் தவிக்கவிட்டனர் என உருக்கமாக தெரிவித்தார்.

ஜெவின் முகத்தை கடைசியா பார்க்க,  தான் அன்று நடத்திய போராட்டங்கள் எல்லாம் வீண் என்று தெரிவித்த தீபா, முன்பு போயஸ் கார்டனுக்குள் தன்னை செல்லவிடாமல் அத்தைதான் தடுத்தார் என்றால்  இப்போது யார் தடுத்தது ? என கேள்வி எழுப்பினார்.

tags
click me!