காலண்டர்களில் நடராஜன் திவாகரன் படம்..!!! - ஜாதியை மையப்படுத்தி சசிகலாவுக்கு குவியும் சமூக ஆதரவு

 
Published : Dec 19, 2016, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
காலண்டர்களில் நடராஜன் திவாகரன் படம்..!!! - ஜாதியை மையப்படுத்தி சசிகலாவுக்கு குவியும் சமூக ஆதரவு

சுருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்தோழி இந்தியாவின் மூன்றாவது மிகபெரிய கட்சியாக விளங்கும் அதிமுகவையும் தமிழகத்தின் ஆட்சியையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது.

தனது உறவினர்கள் நிறைந்துள்ள தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் தொண்டர்களிடயே வெளிப்படையான ஆதரவு பெரிதாக இல்லாவிட்டாலும் சசிகலா சார்ந்த தேவர் சமூக மக்களிடையே ஓரளவுக்கு வரவேற்பு காணப்படுகிறது.

சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக காலண்டர்கள் மற்றும் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் எல்லாம் சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் சகோதர திவாகரன் ஆகியோரது படங்களும் தவறாது இடம் பெறுகின்றன.

மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த முன்னாள் காவலர் ஒருவர் தன் ஜாதி பாசத்தால் காவல்துறை சீருடை அணிந்த புகைப்படத்துடன் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!