டெல்லி சென்றார் ஓபிஎஸ் - தம்பிதுரையுடன் முக்கிய ஆலோசனை

 
Published : Dec 19, 2016, 03:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
டெல்லி சென்றார் ஓபிஎஸ் - தம்பிதுரையுடன் முக்கிய ஆலோசனை

சுருக்கம்

முதலமைச்சர் ஓ.பி.எஸ் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அவர் தம்பிதுறை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் மோடி நேற்று மாலை திடீரென கவர்னரை சந்தித்தார். பின்னர் கார்டனுக்கு வந்து ஆலோசனை நடத்திவிட்டு இல்லம் சென்ற அவர் மீண்டும் கவர்னரை சந்திக்க செல்லவிருப்பதாக இருந்தது.

ஆனால் செல்லவில்லை . இந்நிலையில் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆலோசகர் ஷீலா பால்கிருஷ்ணன், தலைமை செயலாளர் ராமமோகன் ராவ், வெங்கட்ராமன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்றனர். டெல்லியில் அவரை தம்பிதுரை வரவேற்றார்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தற்போது  முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உயரதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை அடுத்து இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். 

அப்போது வார்தா புயல் சேதம் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிலை , பாரத ரத்னா விருது போன்ற கோரிக்கைகள் வைக்க உள்ளார். ஜல்லிக்கட்டு குறித்த கோரிக்கையும் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர தற்போதைய தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசப்படும் என தெரிகிறது

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!