பேராசியர் பெருந்தகையே நூறாண்டு வாழ்க - ஸ்டாலின் நேரில் வாழ்த்து

 
Published : Dec 19, 2016, 03:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
பேராசியர் பெருந்தகையே நூறாண்டு வாழ்க - ஸ்டாலின் நேரில் வாழ்த்து

சுருக்கம்

திமுக  பொருளாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளில் நேரில் சந்தித்தார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் 95 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இது குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை: 

      கழகத்தினருக்கு கொள்கை வகுப்பெடுக்கும் பேராசிரியர். தலைவர் கலைஞரின் அரசியல் பயணத்தில் என்றென்றும் தோள் கொடுத்து துணை நிற்கும் தோழர். எமக்கு ஊக்கமளித்து ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்கும் நல்லாசான். 

இரு வண்ணக் கொடியும், பகுத்தறிவு-சுயமரியாதை கொள்கைகளும் காலத்தால் அழியாத செல்வங்கள் என்பதை உணர்ந்து இலட்சிய வாழ்வு வாழும் பெருந்தகை. நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தை 94 வயதிலும் கட்டிக்காக்கும் உறுதி மிக்க உள்ளம். முதுமையை வயதுக்கு மட்டும் அளித்துவிட்டு, சிந்தனையில் எப்போதும் இளமையாகவும் வலிமையாகவும் இருக்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமுடன் வாழ்ந்து கழகத்திற்கும் தலைவர் கலைஞருக்கும் என்றென்றும் துணை நிற்க வணங்குகிறேன்.

இவ்வாறு வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.ஸ்டாலின் தவிர கனிமொழி , அழகிரி உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!