பொது இடங்களில் ஆவி பிடித்தல் போன்ற நிகழ்வுகளால் நுரையீரல் பாதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பொது இடங்களில் ஆவி பிடித்தல் போன்ற நிகழ்வுகளால் நுரையீரல் பாதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சுவாசக்கோளாறு பிரச்சினை ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் ஆவி பிடித்தல் போன்ற இயற்கை முறை சிகிச்சை சுவாசக் கோளாறு பிரச்சினையைச் சரிசெய்யும் என இயற்கை மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இதை பெரும்பாலான மக்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
undefined
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, சென்ட்ரல் ரயில் நிலைய காவல்துறையினர் சார்பில் பயணிகள் நீராவி பிடிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10 ஆவிபிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் வேம்பு, துளசி, மஞ்சள், கற்பூரவள்ளி உள்ளிட்ட மூலிகைகள் மூலம் ஆவிபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ஆவிபிடித்த பிறகும் முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், பயணிகளுக்கிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஆவிபிடிக்கும் இயந்திரம், படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் அமைக்கப்படும் என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஆவி பிடிக்கும் இயந்திரத்தை பல்வேறு நபர்கள் பயன்படுத்தும்போது தொற்று பாதிப்பு ஏற்படவே அதிக வாய்ப்பிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்;- பொது இடங்களில் ஆவி பிடித்தல் போன்ற நிகழ்வுகளால் நுரையூரல் பாதிக்கப்படும். பொது இடங்களில் ஆவி படிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதை ஊக்குவிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.