மருத்துவமனையில் பார்த்ததை அப்படியே சொல்லிட்டேன்...! ஒபிஎஸ் ஆதரவாளர் விசாரணை ஆணையத்தில் பரபரப்பு தகவல்...!

 
Published : Feb 21, 2018, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
மருத்துவமனையில் பார்த்ததை அப்படியே சொல்லிட்டேன்...! ஒபிஎஸ் ஆதரவாளர் விசாரணை ஆணையத்தில் பரபரப்பு தகவல்...!

சுருக்கம்

Information on OPS Supporter Investigation Commission

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்கு தெரிந்த விவரங்கள் மற்றும் மருத்துவமனையில் பார்த்ததை அப்படியே கூறினேன்  என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 2016ம் ஆண்டில் போயஸ்கார்டன் தோட்ட இல்லத்தில் பணியாற்றிய 31 பேரின் பட்டியலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வழங்கியிருந்தார். 

இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமையலராக பணியாற்றிய ராஜம்மாள் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் ஒபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

அதன்படி நேற்று சமையலர் ராஜாம்மாள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் பார்த்து பேசினேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது. 

இந்நிலையில் இன்று மனோஜ் பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்கு தெரிந்த விவரங்கள் மற்றும் மருத்துவமனையில் பார்த்ததை அப்படியே கூறினேன்  என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!