தலைப்பு செய்தியில் வந்துட்டா தலைவர் ஆயிடுவாரா? ஸ்டாலினுடன் ஒத்துபோகும் தமிழிசை...!

 
Published : Feb 21, 2018, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
தலைப்பு செய்தியில் வந்துட்டா தலைவர் ஆயிடுவாரா? ஸ்டாலினுடன் ஒத்துபோகும் தமிழிசை...!

சுருக்கம்

thamilisai against speech about kamal

சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியலுக்கு வருவதாகவும் கமல் வந்துதான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் இன்று அவரது கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்க உள்ளார். அதற்காக இன்று அப்துல்கலாம் ஊருக்கு சென்றுள்ளார். 

கமல் கட்சி தொடங்குவதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பல எதிர்மறை கருத்துகளை கூறி வருகின்றார். 

இந்நிலையில், சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியலுக்கு வருவதாகவும் கமல் வந்துதான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் தலைவர்களாக வர முடியாது எனவும் தமிழ்மக்கள் சிந்தித்து வாக்களிக்க தொடங்கிவிட்டதால் இனி அவர்களை ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

நடிகர்களின் கட்சிகள் தலைப்பு செய்திகளாக வரலாம், ஆனால் அவர்கள் தலைவர்களாக முடியாது என தமிழிசை விமர்சித்துள்ளார்.

50 ஆண்டுகள் தமிழகத்தை பற்றி கவலைப்படாதவர்கள், தற்போது கட்சி ஆரம்பித்தால் தமிழக மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டர்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!