
என் ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன் என கமல்ஹாசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ம் தேதி அவர் பிறந்த ராமநாதபுரம் மண்ணிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தில் அரசியல் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார்.
அதற்கான முன்னோட்டமாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 தென் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு கமல் இன்று ஆலோசனை நடத்துகிறார்.