பாகிஸ்தான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்.. தீடீர் பரபரப்பு.. காரணம் இதுதான்.?

By Ezhilarasan BabuFirst Published Feb 15, 2021, 5:48 PM IST
Highlights

இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய இரண்டு மணி நேரம் கழித்து எரிபொருள் நிரப்பிய பின்னர் விமானம் அங்கிருந்து புறப்பட்டது. அந்த விமானம் கஜகஸ்தானில் துஷன்பேவுக்கு சென்றது,  

எரிபொருள் பற்றாக்குறையால் இந்திய விமானம் ஒன்று அவசரமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அது கொல்கத்தாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த  விமானமாகும். இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து பாகிஸ்தானும் எல்லையில் இந்தியாவுக்கு அதிக தொல்லை கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தானின் பகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் பறக்க கூடாது என கடந்த ஆண்டு பாகிஸ்தான் தடை விதித்தது. பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது, இந்நிலையில் கொல்கத்தாவிலிருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் எரிபொருள் தட்டுப்பாட்டால் நடுவானில் தடுமாறியது. இதனையடுத்து விமானி பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் விமான ஆம்புலன்சை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தானில் சிவில் ஏவியேஷன் ஆணையத்தை அணுகினார். விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக கூறிய அவர், விமானத்தை தரை இறக்கவும், எரிபொருள் நிரப்பவும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விமானம் அவசரமாக இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. 

இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய இரண்டு மணி நேரம் கழித்து எரிபொருள் நிரப்பிய பின்னர் விமானம் அங்கிருந்து புறப்பட்டது. அந்த விமானம் கஜகஸ்தானில் துஷன்பேவுக்கு சென்றது, அதில் ஒரு பிரிட்டிஷ் நோயாளியுடன் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் இருந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டுக்கும் இடையே பகை இருந்தாலும் அவசர உதவி கருதி விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது பலராலும் பாராட்டப்படுகிறது. இதற்கு முன்னர் 2020 நவம்பர் 17ஆம் தேதி  மருத்துவ அவசர நிலை காரணமாக, ஒரு விமானம் இதேபோன்று கராச்சியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. ரியாத்தில் இருந்து அந்த விமானம் டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தபோது கராச்சியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. 
 

click me!