#BREAKING ஓபிஎஸ் கோட்டையில் ஓட்டை.... அமமுக - திமுக திடீர் கூட்டணி... அதிர்ச்சி அதிமுக...!

By vinoth kumarFirst Published Feb 15, 2021, 5:35 PM IST
Highlights

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக கருதப்படும் பெரியகுளம் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக அமமுகவுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தோற்கடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக கருதப்படும் பெரியகுளம் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக அமமுகவுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தோற்கடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கூட்டணி வியூகத்தை அமைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே,  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில். துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோட்டையாக கருதப்படும் பெரியகுளத்தில் திடீர் திருப்பமாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த தங்கவேல் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி 4வது முறையாக இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 7, தேமுதிக 1, அமமுக 1 வாக்குகள் பெற்றது.

மேலும் திமுக மற்றும் அதிமுக சமமாக இருந்த நிலையில், திடீர் திருப்பமாக தேமுதிக மற்றும் அமமுக உதவியுடன் திமுக 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் சொந்த ஊரில் இப்படி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக வெற்றி பெறுவதற்கு அமமுக ஆதரவு தெரிவித்திருப்பது, சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

click me!