தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு.. கொந்தளித்த ராமதாஸ்... 25 லட்சம் கேட்டு அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2022, 3:37 PM IST
Highlights

தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்க்கு உரியது என்றும் பாதிக்கப்பட்ட மீனவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். 
 

தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்க்கு உரியது என்றும் பாதிக்கப்பட்ட மீனவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். 

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதில்  பலநூறு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் உள்ள நிலையில் தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது அதிகாலையில் இந்திய கடற்படையினர் கடலில் ரோந்து மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு தனியாக இருந்த ஒரு படகை நிறுத்தச் சொல்லி சமிக்ஞை  கொடுத்துள்ளனர். ஆனால் மீனவர்கள் படகை தொடர்ந்து செலுத்தியதால், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் ஐந்து இடங்களில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான  நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படியுங்கள்: கேரளாவில் போலீஸ் டார்ச்சர்! ராணுவ வீரர், அவரின் சகோதரர் விரலை உடைத்து சித்தரவதை: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தாக்குதல் நடத்தியது தமிழக மீனவர்களின் விசைப்படுகு என்பதை அறிந்து கொண்ட இந்திய கடற்படை அதில் காயமடைந்த மீனவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் செய்வதை ஏற்க கூடாது. உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிரடி.

கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீண்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது. மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது!

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர். அதனால் ஏதேனும் ரோந்துப் படகு வந்தாலே அவர்கள் அச்சத்தில் படகை விரைவாக செலுத்தும் நிலை தான் உள்ளது. இதை புரிந்து கடற்படையினர் செயல்பட்டிருக்க வேண்டும். பதற்றம் நிறைந்த இந்திய - இலங்கை கடல் பகுதியில் மீனவர்களின் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கடற்படைக்கு பயிற்சியளிக்க வேண்டும். 

இந்திய கடற்படை அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய  மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!