
உண்மையில் ஆண்களுக்கு தான் அறிவு புகட்ட வேண்டும் என்றும் இந்திய ஆண்கள், குறிப்பாக வட இந்தியர்கள் மிருகங்களாக மாறிவிட்டனர். அதனால் தான் போக்ஸ்கோ சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது என பீகார் முதலமைச்சர் சத்ய பால் மாலிக் கடுமையாக பேசியுள்ளார்..
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருவதால், போக்ஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதன்படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் மீரட்டில் உள்ள பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பீகார் கவர்னர் சத்யபால் மாலிக் , இன்று பெண்கள் கல்வி, மல்யுத்தம், ஹாக்கி போன்ற துறைகளில் சாதித்து வருகின்றனர். 'பேட்டி பத்தாவ் பேட்டி பச்சாவ் ' என்ற திட்டத்தின்படி பெண்களை காப்பாற்ற திட்டமிட்டு வருகிறோம் என தெரிவித்தார்..
ஆனால், உண்மையில் ஆண்களுக்கு தான் அறிவு புகட்ட வேண்டும் என்றும் இந்திய ஆண்கள், குறிப்பாக வட இந்தியர்கள் மிருகங்களாக மாறிவிட்டனர். அதனால் தான் போக்ஸ்கோ சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது என தெரிவித்த சத்ய பால் மாலிக். போதிய டாய்லெட் வசதி இல்லாத கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.