#UnmaskingChina: இந்தியா-சீனாவுக்கு வழங்கிய டெண்டரை ரத்து .!! ஸ்டெப் ஸ்டெப்பாக ஆப்பு வைக்கும் இந்தியா.!!

By T BalamurukanFirst Published Jun 18, 2020, 9:28 PM IST
Highlights

    இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியான கல்வான் என்கிற இடத்தில் சீன ரவுடிகளான வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களை கல் பை போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேரும்; சீனா ரவுடிகள் 35பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இதில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்பவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீன பொருட்களை இனிமேல் வாங்க மாட்டோம் என்றும் சீன செயலிகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் சீன பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் சமூக வலைதளங்களில் இந்தியர்கள் பலரும் தங்களது எதிர்ப்பு குரல்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சீனாவுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 417 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கான்பூர் முகல்சராய் ஆகிய நகரங்களுக்கு இடையே ரயில் பாதையில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளை செய்ய சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந்த இரு நகரங்களுக்கு இடையே 417 கிலோமீட்டர் தொலைவிற்கு சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளை செய்ய சீனாவில் உள்ள பீஜிங் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் நான்கு ஆண்டுகளாக குறைந்த சதவீத பணிகளை மட்டுமே அந்த நிறுவனம் முடித்துள்ளது. முறையான பணிகளை முடிக்காததால் சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலதாமதம் காரணமாகத்தான் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இந்திய சீன நாடுகளுக்கு இடையே உள்ள பதட்டம் காரணமாகத்தான் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

click me!