மணிப்பூரில் அதிரடி திருப்பம்... மெஜாரிட்டியை இழந்த பாஜக... ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்..!

By Asianet TamilFirst Published Jun 18, 2020, 8:54 PM IST
Highlights

ஆட்சியைத் தக்க வைக்க 31 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், மணிப்பூர் சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவின் பலம் 23ஆக குறைந்துள்ளது. இதனால், சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கட்சி கோரிவருகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய   எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனையடுத்து ஆளும் பிரேன் சிங் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், தங்களுக்கு ஆட்சிமைக்க எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதால், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு காங்கிரஸ் கட்சி மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
மணிப்பூரில் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 60  சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்ட நிலையில், 4 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி, தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேட்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. 

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் 3 பேர் தங்களது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அதன் கூட்டணி கட்சிகளான தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் 4 பேர், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் என 3 பாஜக எம்எல்ஏ.க்களை சேர்த்து மொத்தம் 9 எம்எல்ஏ.க்கள் பாஜக அரசுக்கு தெரிவித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆட்சியைத் தக்க வைக்க 31 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், மணிப்பூர் சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவின் பலம் 23ஆக குறைந்துள்ளது. இதனால், சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கட்சி கோரிவருகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய   எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனையடுத்து ஆளும் பிரேன் சிங் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், தங்களுக்கு ஆட்சிமைக்க எம்.எல்.ஏ.க்கள் பலம் இருப்பதால், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு காங்கிரஸ் கட்சி மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.
கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியை பாஜக கவிழ்த்து தங்களுடைய ஆட்சியை அமைத்தது. தற்பேது அதே பாணியில் மணிப்பூரில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து, ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

click me!