புதிய சாதனை படைத்தது இந்தியா... மோடி பிறந்த நாளில் 2.26 கோடி தடுப்பூசி..!

By Thiraviaraj RMFirst Published Sep 18, 2021, 2:06 PM IST
Highlights

மகளிர் மோர்ச்சா சார்பில், கோவிட் -19 தொற்றுநோயின் போது நாள் முழுவதும் உழைத்த 71 பெண் கரோனா வீரர்களுக்கு விருதுகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

சாதனை படைக்கும் வகையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளில் இந்தியா 2.26 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவில் 2.26 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதுவரை 79 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாளையொட்டி, பிரதமரின் பொது வாழ்க்கையின் 20 ஆண்டுகளை முன்னிட்டு 20 நாள் மெகா நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. ‘சேவா சமர்பன் ’என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறும். இந்த நிகழ்வின் மூலம் கோவிட் -19 க்கு எதிராக ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகாதார சோதனை முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இது தவிர, பிஜேபி இளைஞர் பிரிவு இரத்த தான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓபிசி மோர்ச்சா தொழிலாளர்கள் மற்றும் அனுசுசித் ஜாதி மோர்ச்சா ஆகியவை பழங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவோர், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களில் விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. கிசான் மோர்ச்சா 'கிசான் சம்மன் திவாஸ்' நிகழ்ச்சியை 71 விவசாயிகளையும் 71 இளைஞர்களையும் பாராட்டும் அதே வேளையில், மகளிர் மோர்ச்சா சார்பில், கோவிட் -19 தொற்றுநோயின் போது நாள் முழுவதும் உழைத்த 71 பெண் கரோனா வீரர்களுக்கு விருதுகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பிஜேபி 140 மில்லியன் ரேஷன் பைகளை பிரதமரின் படத்துடன் தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
பிரதமர் மோடி செப்டம்பர் 17, 1950 இல் குஜராத்தில் தேநீர் விற்பவர்களின் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். சுதந்திர இந்தியாவில் பிறந்த ஒரே பிரதமர் அவர். 

click me!