இன்னக்கி இந்தியா கெத்தா இருக்குன்னா அதுக்கு மோடிதான் காரணம்.. மார்தட்டும் எல்.முருகன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 18, 2021, 1:19 PM IST
Highlights

வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை என அனைத்திலும் இந்தியா தற்போது வளர்ச்சியடைந்த தேசமாக இருப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசே காரணம் என்றார், 70 ஆண்டுகளில் செய்யவேண்டியதை பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளார் என்றும் அவர் கூறினார். 

பாதுகாப்பு, வெளியுறவுத்துறை என அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்திருப்பதற்கு பிதமர் மோடி தலைமையிலான அரசு தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 71வது பிறந்த தினம் நாடு முழுவதும் பாஜக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் 20 ஆண்டுகாலம் பிரதமர் மற்றும் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு சேவையாற்றியதை போற்றும் வகையில் நேற்று முதல் அடுத்த 21 நாட்களுக்கு அவரின் பிறந்த தினத்தை கொண்டாட தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில்  மத்திய அரசின் திட்டங்களை பரைசாற்றும் வகையிலான புகைப்பட கண்காட்சி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தர்ம பிரகாஷ் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். பின்னர் அதில் பேசிய எல். முருகன் நாட்டின் பெண்கள் அனைவருக்கும், ஜன்தன் திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது, அதில் அரசின் மானியங்கள் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கட்ந்த 7 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 

வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை என அனைத்திலும் இந்தியா தற்போது வளர்ச்சியடைந்த தேசமாக இருப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசே காரணம் என்றார், 70 ஆண்டுகளில் செய்யவேண்டியதை பிரதமர் மோடி 7 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளார் என்றும் அவர் கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் இந்த புகைப்படங்களை மாணவர்கள் ஆர்வமாக பார்க்கும்போது இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதை அறியமுடிகிறது. உயர வேண்டும் என்ற சிந்தனை உள்ள மாணவர்களுக்கு முதல்வர் மோடியின் சாதனைகள் ஒரு முன்னுதாரணமாக இருக்கும், இந்த புகைப்படத்தில் அவர் குஜராத்திலிருந்து தொடங்கிய வாழ்க்கை முதல் அவர் பிரதமராக உயர்ந்தது வரை என அனைத்தும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார்.

 

click me!