ரஷ்யா, சீனாவையடுத்து இந்தியாவும் ரெடி..!! மத்திய அரசு முடிவு செய்தால் ஒப்புதல் அளிக்க ஐ.சி.எம்.ஆர் தயார்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 21, 2020, 10:00 AM IST
Highlights

பாரத் பயோடெக், கேடிலா, சீரம் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையான சோதனையிலிருந்து வருகின்றன. 

மத்திய அரசு முடிவு செய்தால் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்க தயாராக இருக்கிறோம் என ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பல்ராம் பார்க்கவா நாடாளுமன்ற நிலைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, சுமார் 180 க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 2.28 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7.95 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 1.55 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா, தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. 

எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு  அமெரிக்கா இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரத்யேக தடுப்பூசி வந்தால் மட்டுமே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என, ஒட்டு மொத்த உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கிறது. கலையில் அதற்கான ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன, அதில் இந்தியாவும் முன்னிலையில் இருந்து வருகிறது. தடுப்பூசி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு முடிவுக்கு வந்தால் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்க தயாராக இருக்கிறோம் என்று  ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பல்ராம் பார்க்கவா நாடாளுமன்ற நிலைக்குழுவின் தெரிவித்துள்ளார். 

ரஷ்யா தடுப்பூசியை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், சீனாவும் தடுப்புசி பயன்பாட்டிற்கு தயார் என்று கூறி அதற்கு விலையையும் அறிவித்துவிட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாரத் பயோடெக், கேடிலா, சீரம் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையான சோதனையிலிருந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில்  ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பல்ராம் பார்க்கவா, நேற்று ஆஜராகி தடுப்பு மருந்து நிலை குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர்,  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உள்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து இரண்டாவது கட்ட சோதனை முடியும் நிலையில் இருக்கிறது, மத்திய அரசு முடிவு செய்தால் அவசர அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று விளக்கமளித்துள்ளார்.

 

click me!