இங்க பாருப்பா ! அவ்வளவு தைரியம் வந்திருச்சா! அக்டோபர்ல உறுதியா போர் நடக்குமாம் !! அடித்துச் சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர் !

By Selvanayagam PFirst Published Aug 28, 2019, 9:00 PM IST
Highlights

வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

காஷ்மீர் மாநிலம்  இரண்டாக பிரிக்கப்பட்டு அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு அதை சர்வதேச பிரச்சனையாக்க முயன்றது.

ஆனால் சீனா தவிர வேறு எந்த நாடுகளும் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் போர் எழும் சூழ்நிலை உரவாகியுள்ளது.

இந்நிலையில் ராவல்பிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது பேசினார். அப்போது  இந்தியா - பாகிஸ்தான் இடையே, வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் நடக்கும். காஷ்மீர் போராட்டத்திற்கான உறுதியான நேரம் வந்துவிட்டது.
 
இந்த விவகாரத்தில், இந்தியாவுடன் நடக்கும் போர், இரு நாடுகளுக்குமான கடைசி போராக இருக்கும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என ஐ.நா., விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்திய அரசால், காஷ்மீர் அழிவின் சூழ்நிலையில் உள்ளது. இதற்கு பாகிஸ்தான் தான் தடையாக உள்ளது. இந்த விவகாரத்தினால், முஸ்லிம் நாடுகள் மவுனம் காப்பது ஏன்? இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என இன்னும் நம்புபவர்கள் முட்டாள்கள். நமக்கு உற்ற நண்பனாக சீனா உள்ளது என அதிரடியாக தெரிவித்தார்.

click me!