#UnmaskingChina: ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா..!! முதல் ஸ்டெப் இதுதான்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2020, 7:11 PM IST
Highlights

அதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு BIS தர விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன், மேலும் இந்திய தர நிர்ணய பணியகம் வகுத்த விதிகளை நாம் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்

சீன பொருட்களை புறக்கணிக்குமாறு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்றாட அலுவலக பயன்பாட்டிற்காக எந்த சீன தயாரிப்புகளையும் வாங்க வேண்டாமென்று தனது அமைச்சக அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்திய-சீன இடையே எல்லை பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. நம் ராணுவ வீரர்களை சூழ்ச்சி செய்து கொன்ற சீனாவுக்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் கொந்தளித்துவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், சீனா நடந்து கொள்ளும் விதத்தை வைத்து நான் அனைவரிடமும்  ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன், சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும், நாங்களும் அனைத்து சீன தயாரிப்புகளை புறக்கணிக்கப் போகிறோம் என தெரிவித்துள்ள அவர், அன்றாட அலுவலக பயன்பாட்டிற்காக எந்த சீன தயாரிப்புகளையும் இனி வாங்க வேண்டாம் என்று தனது  அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

அதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு BIS தர விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன், மேலும் இந்திய தர நிர்ணய பணியகம் வகுத்த விதிகளை நாம் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும், நம்முடைய பொருட்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவை சரிபார்க்கபடுகின்றன, அப்படிப்பட்ட சரிபார்ப்புகளின்படி நமது பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிராகரிக்கப்படுகிறது, ஆனால் அவர்களுடைய பொருட்கள் இந்தியாவுக்கு வரும்போது கடுமையான தரக்கட்டுப்பாடு இல்லை, 2016ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய பிஐஎஸ்  சட்டம் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

click me!