காங்கிரஸ் கட்சியில் அதிரடி... கதர் கட்சியை கலங்கடித்ததால் சோனியா எடுத்த முடிவு..!

Published : Jun 18, 2020, 06:24 PM IST
காங்கிரஸ் கட்சியில் அதிரடி... கதர் கட்சியை கலங்கடித்ததால் சோனியா எடுத்த முடிவு..!

சுருக்கம்

காந்திய சிந்தனை மற்றும் நேருவின் கண்ணோட்டத்தை உயிர் மூச்சாக கொண்டுள்ள தன்னை போன்றவர்களுக்கு கட்சி சிதைந்து வருவது திகைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

தங்களது கட்சியை விமர்சித்தது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து சஞ்சய் ஜா நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் சஞ்சய் ஜா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், கட்சி நடவடிக்கைகளை சீர் செய்வதில் அசாதாரண மந்தநிலை மற்றும் குழப்பம் நிலவுவதாக கூறியிருந்தார். இதனை உணர முடியாத தலைவர்கள் பலர் கட்சிக்குள் இருப்பதாகவும், காந்திய சிந்தனை மற்றும் நேருவின் கண்ணோட்டத்தை உயிர் மூச்சாக கொண்டுள்ள தன்னை போன்றவர்களுக்கு கட்சி சிதைந்து வருவது திகைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அவரின் இந்த கட்டுரை கட்சிக்குள் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து சஞ்சய் ஜாவை நீக்கி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களாக அபிஷேக் தத் மற்றும் சாதனா பார்தி ஆகியோரை நியமித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் பல்வேறு தேசிய தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தவர் சஞ்சய் ஜா.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!