டெண்டர் முறைகேடு புகார்... முதல்வருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஆர்.எஸ்.பாரதி..!

By vinoth kumarFirst Published Jun 18, 2020, 5:25 PM IST
Highlights

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆர்.எஸ்.பாரதி வாபஸ் பெற்றார்.

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆர்.எஸ்.பாரதி வாபஸ் பெற்றார்.

கிராமப்புற இணையதள சேவைக்கான பைபர் நெட் டெண்டர் மற்றும் நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 15ம் தேதி விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. டெண்டரில் யாரும் பங்கேற்காதபோது ஊழல் நடந்துள்ளதாக, அரசியல் காரணங்களுக்காக வழக்குத் தொடரபட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி டெண்டரே ஒதுக்காதபோது எப்படி ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்த முடியுமென கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கை வாபஸ் பெறுவதே முறையாக இருக்கும் என ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, முதல்வர் மற்றும் அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் ஆர்.எஸ்.பாரதி வாபஸ் பெற்றார். இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

click me!