சொந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி விநியோகிக்க முடியாமல் திணறும் இந்தியா.. ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jul 6, 2021, 10:41 AM IST
Highlights

தடுப்பூசி செலுத்தப்படாததால் பொதுமக்கள் தினம்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி இல்லை என்ற பெயர்ப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். 

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழலில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதத்தில் இருந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்த நிலையில் தமிழகத்திற்கு இறுதியாக ஜூலை 2 ஆம் தேதி 1.50 லட்சம் தடுப்பூசி வந்திருந்தது, அதற்குப்பிறகு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படாது, தடுப்பூசி வந்தால் மட்டுமே செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநகராட்சி இணையதளத்தில் பதிவிட்டு உள்ளது.  அதேபோல பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஒரு சில இடங்கள் அரசு மருத்துவமனை, அத்தியாவசிய பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இடங்கள் போன்றவற்றில் மற்றுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, மற்ற மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படாததால் பொதுமக்கள் தினம்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி இல்லை என்ற பெயர்ப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். எப்போது தடுப்பூசி வரும் என மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.  

click me!