மிகப்பெரிய கடனாளி நாடாக இந்தியா..!! ஆண்டவா இது எங்க போய் முடியப்போகுதோ..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2020, 10:56 AM IST
Highlights

இந்நிலையில் இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்பின்மை, 10 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்  தெரிவித்துள்ளது.

2021 இல் மிகப்பெரிய கடனாளி நாடாக இந்தியா இருக்கும் என பொருளாதாரத் தர மதிப்பீட்டு  நிறுவனமான மூடீஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக  வேலை இழப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா,பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வளர்ந்து வரும் பெரிய நாடுகளாக உள்ளன. இந்நிலையில், இந்தபெரிய நாடுகளின் கடன் 2019 ஆம் ஆண்டின் அளவைவிட 2021 ஆம் ஆண்டின் முடிவில் சராசரியாக 10% வரை அதிகரிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் குறிப்பிட் டுள்ளது. இவற்றில் சில நாடுகள் ஏற்கனவே அதிக கடன் வாங்கி இருப்பதால் அதிக வட்டி செலுத்த வேண்டி வரலாம், இதனாலும் கடன் மேலும் அதிகரிக்கலாம் என்று மூடீஸ் தெரிவித்திருக்கிறது.

2021 ஆம் ஆண்டுவாக்கில் பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கடன் சுமை வளரும் நாடுகளிலேயே அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்தியா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் நிதித்துறை பலவீனமாக இருக்கிறது. அதோடு சில நாடுகளில் நிரந்தரமான செலவு பிரச்சினைகளும் இருக்கின்றன. இந்த பிரச்சனைகள் மேலே சொன்ன நாடுகளில் சிக்கலை அதிகப்படுத்துகின்றன என்றும், மூடிஸ் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்பின்மை, 10 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்  தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஜனவரியில் 7. 22 சதவீதமும், பிப்ரவரியில் 7.26 சதவீதமுமாக இருந்த வேலையின்மை, மார்ச் மாதம் கொரோனா பெருந் தொற்று க்குப் பின்னர் தொழில் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் வேகமாக அதிகரிக்க துவங்கியது. இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மத்திய மையத்தின் தரவுகள் படி, ஜூலை மாதத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு இன்மை முறையான துறையில் (formal sector) 9.15 சதவீதமாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 9. 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தில் ஜூலை மாதம் 6.67 சதவீதமாக இருந்த வேலை இன்மை ஆகஸ்டில் 7.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக வேலையின்மை ஜூலையில்  7.43 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலையின்மையால் ஹரியானா  33.5 சதவீதத்துடனும், திரிபுரா 27.9 சதவீதத்துடனும் நாட்டிலேயே மிகக் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது மாநிலங்களாக உள்ளன. 

 

click me!