ஆர்.எஸ்.எஸ் - பாஜக கூட்டணிக்கு இதுதான் வேலை.. பிரதமரை டாராக கிழித்த ஓவைசி!

Published : May 29, 2022, 09:58 AM IST
ஆர்.எஸ்.எஸ் - பாஜக கூட்டணிக்கு இதுதான் வேலை.. பிரதமரை டாராக கிழித்த ஓவைசி!

சுருக்கம்

பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டணி நாட்டில் பொய்களை பரப்பி வருகிறது. இந்த இந்தியா என்னுடையதோ, உத்தவ் தாக்கரேவின்தோ, மோடியோ, அமித் ஷாவினதோ இல்லை.

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசியுள்ள அசாதுதீன் ஓவைசி, 'கடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின் போது, பாஜக மற்றும் சிவ சேனாவை தடுக்க முடியும் என்பதால் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஓவைசிக்கு ஓட்டு கேட்டனர். தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ், சிவ சேனாவை திருமணம் (கூட்டணி) செய்து கொண்டனர். மூன்று கட்சிகளில் யார் மணமகன் என்று தெரியவில்லை. 

வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு பதிலாக, முஸ்லிம்களுக்கு கட்சியின் பயம் காட்டப்படுகிறது. பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டணி நாட்டில் பொய்களை பரப்பி வருகிறது. இந்த இந்தியா என்னுடையதோ, உத்தவ் தாக்கரேவின்தோ, மோடியோ, அமித் ஷாவினதோ இல்லை. இந்தியா யாருக்கு சொந்தமானது என்றால், அது திராவிடர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. நான் இடங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். 

ஆனால், முகலாயார்களுக்கு பிறகுதான் பாஜக வந்துள்ளது. பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் அல்லது யோகி ஆதித்யநாத்  ஆகியோருக்கு எதிராக யாராவது பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் நமது நம்பிக்கைக்கு எதிராக யாராவது ஏதாவது சொன்னால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது' என்று பேசினார்.

இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !

இதையும் படிங்க : Raid : பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் ‘திடீர்’ ஐடி ரெய்டு.. எதற்கு தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஃபர்களை அள்ளி வீசும் திமுக.! அவைத்தலைவராகும் ஓபிஎஸ்.?! ரவீந்திரநாத்துக்கு துணை முதல்வர் பதவியாம்.!
திமுகவில் இணைகிறார் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்..! கலகலக்கும் அரசியல் களம்