இந்தியா வைத்துள்ள அணு குண்டுகளுக்கு இவ்வளவு பவரா...! திகிலூட்டும் பயங்கரம்...அலறும் சர்வதேச நாடுகள்...!

Published : Aug 17, 2019, 12:09 PM ISTUpdated : Aug 17, 2019, 12:10 PM IST
இந்தியா வைத்துள்ள அணு குண்டுகளுக்கு இவ்வளவு பவரா...!  திகிலூட்டும் பயங்கரம்...அலறும் சர்வதேச நாடுகள்...!

சுருக்கம்

இந்தியாவின் அணுகுண்டு சோதனை செய்யப்படும் "பொக்ரானிலிருந்து" இதை அறிவித்திருப்பது இந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் . இதைவிட உலகத்திற்கு எதிரான ஒரு அறிக்கை இருக்காது, அதுவும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மிகவும் மோசமாக உள்ள காலகட்டத்தில் இப்படியான அறிக்கைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.  

அணுகுண்டுகளை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிவந்த நிலையில், இந்தியாவின் நிலைபாடு எதிர்காலத்தில் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது, இந்திய மக்களுக்கு செய்யும் துரோகம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்து. அது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளது.அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

இந்திய நாட்டின் மீது அணுகுண்டுகளால் தாக்குதல் நடக்காதவரை முதலில் அணுகுண்டுகளை பயன்படுத்த மாட்டோம்” என்கிற இந்தியாவின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அணுகுண்டு சோதனை செய்யப்படும் "பொக்ரானிலிருந்து" இதை அறிவித்திருப்பது இந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் . இதைவிட உலகத்திற்கு எதிரான ஒரு அறிக்கை இருக்காது, அதுவும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மிகவும் மோசமாக உள்ள காலகட்டத்தில் இப்படியான அறிக்கைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

ஏற்கனவே இருந்த "முதலில் பயன்படுத்த மாட்டோம்" என்கிற கொள்கை சரியாக இருந்ததா? இல்லை, என்பதுதான் பதில். அந்நிய நிலப்பரப்பில் இந்திய ராணுவம் ஆக்கிரமித்து முன்னேறும் போது அதை தடுக்கும் வகையில் எதிரி நாடு "தந்திரோபாய" (tactical) அணுகுண்டுகளை பயன்படுத்தினால், இந்தியாவிற்கு அணுகுண்டுகளை பயன்படுத்தும் உரிமை கிடைத்துவிடுகிறது. மற்றொரு நாடு இந்திய நிலப்பரப்பின் மீது அணு குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தும்வரை இந்தியா காத்திருக்க வேண்டியதில்லை  காந்தியின் தேசம் உலகத்திற்கு கொடுத்த பேராயுதம் "அஹிம்சை",அதுவும் அஹிம்சா வழிப்போராட்டங்களின் வாயிலாக பெறப்பட்ட இந்தியாவின் 73ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் நடைபெறும் சமயத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது.
 
மிகவும் பதட்டமான காலகட்டத்தில் பொறுப்பாக செயல்படவேண்டிய அமைச்சர் இப்படி தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. - பூவுலகின் நண்பர்கள்இந்த நிலையில் சமூகவலூதளத்தில்  கருத்து பதிவுசெய்துள்ள பூவுலகின் நண்டர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், உலக்தில் உள்ள அணுகுண்டுகளை வைத்தை இந்த உலகத்தை ஒரு முறை அல்ல இரு முறை அல்ல, 100 முறை அழிக்கலாம் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?