இந்தியா குறித்து ஒரு shocking news..!! அய்யோ ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே..!!

By Ezhilarasan BabuFirst Published May 19, 2020, 9:54 AM IST
Highlights

கடந்த ஜனவரி 15 முதல் மார்ச் 23 வரை மொத்த வெளிநாட்டு பயணிகளில் 19 சதவீதம் பேர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் 81 சதவீதம்  பேருக்கு சோதனை செய்யப்படவில்லை என்றும் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது

வெளிநாட்டில் இருந்து வந்த  81% பேருக்கு இந்தியா கொரோனா பரிசோதனை செய்யவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்மை அம்பலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .  ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னதாக மார்ச் 23 வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 81 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை  என்பது தெரியவந்துள்ளது . கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது , சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கானோருக்கு அத்தொற்று பரவியது . ஒவ்வொரு நாளும் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர் இது என்ன வகையான தொற்று எவ்வாறு இது பரவுகிறது இதன் பாதிப்பின் அறிகுறிகள் என்ன.?  எந்த மருந்து  கொடுத்தால் இது குணமாகும்.?  என எந்தத் தகவலும் தெரியாமல் ஆரம்பத்தில் திணறிப் போனது சீனா. பின்னர் ஒருவழியாக நோய்பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது . 

இந்நிலையில் சீனாவின் அண்டை நாடான இந்தியா கொரோனா நோய்த்தொற்று நாட்டுக்குள் பரவி விடாத வகையில் 2020 ஜனவரி 17 அன்று மும்பை டில்லி கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் சோதனையை விரிவுபடுத்தியது , ஆனால் சீனாவுக்கு வெளியிலும் கொரோனா பாதிப்பு உள்ளது என்று உலகச் சுகாதார மையம் எச்சரித்து .  இந்நிலையில் பிப்ரவரி 2 முதல் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரையும் ,  பிப்ரவரி 12 முதல் ஜப்பான் மற்றும் தென் கொரியா பயணிகளையும் இந்தியா சோதனைக்கு உட்படுத்தியது .  இந்த காலகட்டத்தில் கொரோனா  பாதிப்பு உலகம் முழுவதும் 45 ஆயிரத்து 170 என்ற எண்ணிக்கையை எட்டியிருந்தது . அதேபோல்  அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் உட்பட 24 உலக நாடுகளிலும் அது பரவியிருந்தது . இதனால் பிப்ரவரி 26 முதல் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரையும் இந்தியா சோதனைக்கு உட்படுத்தியது .  அதே சமயம் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்கு சோதனை நடத்தவில்லை.  மார்ச்-4 முதலே  இந்தியா வரும் அனைத்து சர்வதேச விமான பயணிகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது .

அதற்குள்ளாக இந்தியாவில் 44 பேருக்கு கொரோனா  உறுதியாகிவிட்டது ,  அதாவது ஜனவரி 17 அன்றே விமான நிலையங்களில் பரிசோதனைகளை துவக்கிவிட்ட பின்னரும் கொரோனா ஊடுருவி விட்டது .  தற்போது மே மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கையை இந்தியா தாண்டிவிட்டது , நோய்த்தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக் கொண்டே போகிறது .  இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு  பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது இந்நிலையில் இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது குறித்து சமூக செயற்பாட்டாளரான சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார் அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது  அதில் ,  கடந்த ஜனவரி 15 முதல் மார்ச் 23 வரை மொத்த வெளிநாட்டு பயணிகளில் 19 சதவீதம் பேர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் 81 சதவீதம்  பேருக்கு சோதனை செய்யப்படவில்லை என்றும் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு  மத்திய பாஜக அரசின் மெத்தனமும் அலட்சியமுமே காரணமென எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டுகின்றனர். 

 

click me!